கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்.தற்போது அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ.1.06 கோடி பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் அண்ணன் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி, பலராமன், பாபுராஜ் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரியும் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கே டி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில்.கே.டி. இராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மோசடி புகார் வழக்கில் கே.டி. இராஜேந்திர பாலாஜியை கைது செய்ய ஒரு டி.எஸ்.பி மற்றும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவு பிறப்பித்துள்ளன மேலும் லுக் அவுட் நோட்டீசும் விடுக்கப்பட்டுள்ள நிலையில்.
இன்று முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை முடக்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில்இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூயமணியின் மனைவி குணா தூயமணி என்பவர் தனது தமகனுக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி என்ற விஜய் நல்லதம்பியிடம் ரூ7 லட்சம் கொடுத்துள்ளனர் மதுரை வில்லாபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த நாதன் மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி அதிமுக ஒன்றிய செயலாளர் கணேஷன் மற்றும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ரூபாய் 7 லட்சமும்.
மேலும் அதிமுக செயலாளர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அழ ங் கரைச்சாமி மகன் ஜோசப் ராஜ் என்பவர் அவரது நண்பரான தரனி தரன் என்பவருக்கு இந்து சமய அறநிலையத் துறையில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதற்காக கூறி இராமுதேவன்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி என்பவர் டூபாய் 7,50000 உள்ளிடப் ஐந்து பேரிடம் 57லட்சத்தி50 ஆயிரம் நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக.மேற்கண்ட நபர்கள் இணையதளம் மற்றும் நேரிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் மனு அளித்துள்ளனர்.