சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை;
இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை.
இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும்.
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது
புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது
காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும்.
சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
விவசாயிகளின் வருமானதை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்.
46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது; 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ₹5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவில் உணரப்படுகிறது; தமிழ்நாட்டுக்கு இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்; இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை.
பருவமழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்
கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி,
- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.