கடந்த நான்காண்டுகளில் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட விவரங்களைக் காட்டும் அறிக்கை, இணைப்பு-A உடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவுகளின் கீழ் செய்யப்படுகிறது, இதில் எந்த சாதி அல்லது நபர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கவில்லை. எனவே சாதி/வகை வாரியான தரவு எதுவும் மத்தியில் பராமரிக்கப்படவில்லை.
உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1104 நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு எதிராக, 700 நீதிபதிகள் பணிபுரிந்து வருகிறார்கள். 404 இடங்கள் காலியாக உள்ளன. உயர் நீதிமன்றங்களில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்களின் விவரங்கள் இணைப்பு-B இல் தரப்பட்டுள்ளது. தற்போது, 171 பரிந்துரைகள் அரசு மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் இடையே பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 233 பணியிடங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் மேலும் பரிந்துரைகள் இன்னும் பெறப்படவில்லை.
உயர் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது நிர்வாக மற்றும் நீதித்துறைக்கு இடையே ஒரு தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த மற்றும் கூட்டுச் செயலமுறை ஆகும். இதற்கு மாநில மற்றும் மத்திய அளவில் உள்ள பல்வேறு அரசியலமைப்பு அதிகாரிகளிடமிருந்து ஆலோசனை மற்றும் ஒப்புதல் தேவைப்படுகிறது. தற்போதுள்ள காலியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது; ஓய்வு பெறுதல், ராஜினாமா செய்தல் அல்லது நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் காலியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இணைப்புகளின் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிலவரம் வருமாறு :
சென்னைநீதிமன்றத்தில் 2018- ல் 8 நீதிபதிகளும், 2019-ல் ஒருவரும் , 2020-ல் 10 பேரும் , 2021-ல் 5 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில்
அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை
நிரந்தர இடங்கள்: 56
கூடுதல் இடங்கள்:19
மொத்தம்: 75
தற்போது பணியில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை:
நிரந்தர இடங்கள்: 44
கூடுதல் இடங்கள்:15
மொத்தம்: 59
நீதிபதிகள் பதவி காலியிடங்கள்:
நிரந்தர இடங்கள்: 12
கூடுதல் இடங்கள்:4
மொத்தம்: 16
இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.