அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 30.05.2022 முதல் 14.06.2022 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், இஆப, அறிவிப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி எதிர்வரும் 30.05.2022 அன்று முதல் 14.06.2022 வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து ஏனைய நாட்களில்
வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சங்கராபுரம் வட்டத்திற்கு 30.05.2022 முதல் 10.06.2022 வரையிலும், மாவட்ட வருவாய் அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு 30.05.2022 முதல் 06.06.2022 வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் சின்னசேலம் வட்டத்திற்கு 30.05.2022 முதல் 06.06.2022 வரையிலும், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்திற்கு 30.05.2022 முதல் 03.06.2022 வரையிலும்,
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சிய் தலைமையில் கல்வராயன்மலை வட்டத்திற்கு
30.05.2022 முதல் 02.06.2022 வரையிலும்
திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு 30.05.2022 முதல் 13.06.2022 வரையிலும்
வருவாய் தீரவாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைளை
கடைபிடித்து, சமூக இடைவெளியினை பின்பற்றி தங்களது கோரிக்கை மனுக்களை 30.05.2022 நாள் முதல் 14.06.2022 நாள் வரை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்ப்பித்து தீர்வுகண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.