கள்ளக்குறிச்சி மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரின் மகன் விஜயராஜ் (31) என்பவர், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார், பின்பு 08.04.2022-ந் தேதி மனைவி மீது சந்தேகம் கொண்டு பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொலை செய்துள்ளார். இவர் மீது மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.