ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரம் மாறியது.
இதில் கலவரக்காரர்களால் பள்ளியிலிருந்து மாணவர்களின் சான்றிதழ்,.பள்ளி பேருந்து,போலீஸ் பேருந்து பொதுமக்களின் வாகனங்கள் உள்ளிட்டவை தாக்கியதோடு முற்றிலுமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிறார்கள் உட்பட 399 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ் எறித்தது , மற்றும் பள்ளி மற்ற போலீஸ் பேருந்து தீயிட்டு கொளுத்தியது போலீசார்கள் மீது கற்களை வீசி தாக்கியது உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன் , உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் , வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி , தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகிய நான்கு பேரையும் எஸ்.பி பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சி சரவணகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.