• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !

by admin
October 4, 2022
in செய்திகள், விளையாட்டு
0
மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !
0
SHARES
90
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடியது. சில்ஹெட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ரிச்சா கோஷ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை மேகனா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹேமலதா 2 ரன்களுக்கு அவுட்டானார். 3ம் வரிசையில் இறங்கிய தீப்தி ஷர்மா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெமிமா 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவிக்க, இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. இதையடுத்து 179 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே அடித்து 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Share this:

  • Tweet
  • Telegram
Tags: FakeNewsHOTNEWSNEWSSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

12 months ago
திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

9 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In