கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஜி. அரியூர், செட்டித்தாங்கள், அரும்பாக்கம், சந்தைப்பேட்டை, மணம்பூண்டி, டி. அத்திப்பாக்கம், மணலூர்பேட்டை வீரபாண்டி அரகண்டநல்லூர் கண்டாச்சிபுரம் முகையூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று இரவு 10 மணியளவில் துவங்கிய இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய காலை 8 மணிவரை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக நிலவிவந்த அனல் காற்று மற்றும் வெக்கை தீர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி உள்ளது மேலும் இரவு பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்களில் நீர்ப்பிடிப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.