தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் சக்தி வாய்ந்த திறமை வாய்ந்த அரசர் குடும்பமாக காணப்படுவது சோழ வம்சம் ஆகும்.
இந்த சோழர் காலத்தில் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். இந்த கோவில் ஆனது இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலை திணிக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது இதுபோல் ஒரு கோவில் தற்போது கட்டினால் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாத அளவிற்கு தஞ்சை பெரிய கோவிலின் கலை சிற்பம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட கோவில்களின் கலை வடிவம் பிரமிக்க வைக்கின்றது ..
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையின் பிறகு பல்வேறு கற்பனையா உண்மையா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்த நிலையில் .
தற்பொழுது அந்த கதையினை திரை வடிவமாக இயக்குனர் மணிரத்தினம் படைத்து வெளியிட்ட பிறகு அதன் மீதான ஆர்வம் மக்களுக்கு தற்பொழுது அதிகரித்து உள்ளது இதன் ஒரு பகுதியாக சோழ இளவரசர் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு சாட்சி கல்வெட்டு உள்ள உடையார் குடி சிவன் கோயில்..
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இந்த கல்வெட்டை காண காட்டுமன்னார்கோயில் படையெடுக்கும் மக்கள்.