சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது.
இந்த வழக்கறிஞர் சங்க தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன அதில் ஒரு தரப்பு மோகன கிருஷ்ணன் மற்றொரு தரப்பு பால்கனகராஜ் ஆகிய இரு அணிகளும் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தல் ஆனது வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தின் முக்கிய நீதிமன்றமாக விளங்குவது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் பால் கனகராஜ் மற்றும் மோகன் கிருஷ்ணன் ஆகிய இருவரும் தலைவர பதவிக்கு பெரும்பலத்துடன் மோதிக் கொள்வதாக வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
11 பதவிகளுக்கு தேர்தல் நடந்தாலும் சங்கத்தின் தலைவர் பதிவை கைப்பற்றுவதில் தான் போட்டி நிலவுகின்றது.
இன்றைய நிலவரப்படி பால் கனகராஜைவிட மோகன கிருஷ்ணன் கைதான் வழக்கறிஞர் சங்க தேர்தலில் ஓங்கி வருகிறது.
வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் அனைத்து வழக்கறிஞர் இடமும் அன்பாகவும் நட்பாகவும் பழகி வருவதாகவும் அவர் தலைவரானால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கறிஞர் பால் கனகராஜ் தற்பொழுது பாஜகவின் மாநில துணைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிகளுக்காக பல நலப் பணிகளை செய்துள்ளார் .தலைவர் வேட்பாளர் மோகன் கிருஷ்ணன் அவர் கடந்த முறை தலைவராக இருந்த பொழுது சிறிய அளவில் இருந்த உணவகத்தினை பெரியதாக மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார். அவர் நிதி பெற்று அந்த உணவகத்தினை மூன்று அடுக்குமாடி கட்டிடமாக தற்பொழுது மாற்றி வழக்கறிஞர்கள் அமர்ந்து நிம்மதியாக உணவு உண்ண ஒரு வழி செய்து உள்ளார்.
இதுபோல் பல எண்ணற்ற நல்ல காரியங்களை மோகனகிருஷ்ணன் செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.