தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல் நலன் பூரண நலம் பெற வேண்டி, திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல். வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் திருக்கோவிலூரில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று, கோவிலில் இன்று நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருக்கோவிலூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று கேப்டன் விஜயகாந்தின் உடல்நலம் நலம் பெற வேண்டுமென வேண்டிக் கொண்டனர்.