கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர பகுதியில் உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற காவல் நிலையத்தில் இன்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்த பின்னர் திருக்கோவிலூர் சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் அதன் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு என கூடுதல் போலீசாரும் அதே போன்று கூடுதலாக 3 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோன்பு பணி மேற்கொள்ளவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தினார்.
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்திடவும், அதேபோன்று தொடர்ந்து இருசக்கர வாகன தணிக்கை நடத்திடவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் டிஎஸ்பி, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.