கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் நிறுத்தி உள்ளார். இந்நிலையில் காலை லாரி எடுப்பதற்காக சென்று பார்த்த போது லாரி காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குணசேகர் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இரவு 11.48 மணி அளவில் லாரி திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டு நோக்கி சென்றது தெரிய வந்தது.
குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், காலை 8 மணி அளவில் லாரியின் உரிமையாளருக்கு மயிலாடுதுறை துறையில் இருந்து தொலைபேசி மூலம் தங்களது லாரி எனது வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கிவிட்டது.
எனவே லாரியை மீட்க வேண்டும் என்றால் உடனடியாக வந்து இழப்பீடு வழங்கி மீட்டுக்குக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லாரியின் உரிமையாளர் தனது லாரி திருடப்பட்டது எனவும் அவர்களை அங்கேயே பிடித்து வையுங்கள், தான் வருவதாக கூறியுள்ளார். மேலும், இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.
தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்டு அதனை திருடி சென்ற சத்தி(20) மற்றும் சங்கர்(32) என்பவரகளையும் கைது செய்து திருக்கோவிலூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.