விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் தொடர்ச்சியாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் சென்ற போலீசார் அங்கு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு சாராயங்களை மட்டும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் பெண்கள் அதிகமாக சாராய விற்பனை ஈடுபட்டது தெரிய வந்தது அடுத்து அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அரகண்டநல்லூர் போலீசார் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு இடங்களில் ஆண்கள் சாராய விற்பனையில் ஈடுபடுவது வழக்கம் நூர்தன முறையில் பெண்களை வைத்து தற்போது சாராய விற்பனை அப்பகுதியில் நடைபெறுவது அம்பலத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.