கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கல்வராயன் மலை பகுதி குரும்பலூர் கிராமித்தில் சாராயம் காய்ச்ச போடபட்ட ஊழலை கண்டுபிடித்து போலீசார் கொட்டி அழித்தனர்.
இதில் மொத்தம் 8 பிளாஸ்டிக் டேங்கில் இருந்த 1600 லிட்டர் சாராய ஊரலை போலீசார் அங்கேயே கொட்டி அழித்தனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி கூறுகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீரழிக்கும் கள்ளச்சாராயம் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறமான செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.