செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விழுப்புரத்தில் பேச்சு.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அனையை கர்நாடக அரசு கட்டகூடாது என்பது தான் காங்கிரசின் நிலைபாடு என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலையிலான காங்கிரசார் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இருசக்கரவாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி கையெழுத்து இயக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், செயற்கையாகவே பெட்ரோல், டீசல் கேஸ் விலை ஏற்றத்தினை மத்திய அரசு செய்து வருவதாகவும், கச்சா எண்ணெய் உலக சந்தையில் டாலர் 50 ரூபாய்க்கு குறைவாக உள்ள போதிலும், கலால் வரியை ஏராளமாக விதித்துள்ளதால் தான் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் கருவேப்பிலை விலை கூட உயர்ந்துவிடும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் இதனால் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், கர்நாடக அரசு மேகதாதுவில் அனை கட்ட கூடாது என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடு என்றும் ஒரு மாநிலத்தில் உற்பத்தி ஆகும் நீர் அம்மாநிலத்திற்கு முழுமையாக சொந்தமானது அல்ல உற்பத்தி ஆகி வர நீரை தேவைக்கேற்ப மத்திய நீர்வள அமைச்சகம் மூலம் நீரை பகிர்ந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அனை கட்ட கூடாது எனவும் மத்திய பாஜக அரசிடம் அமைச்சரவை உள்ளது அவர்களின் தேவைக்கேற்ப அமைச்சரவையை மாற்றி கொள்ளலாம், அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என தெரிவித்தார்.