தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் கண்டாச்சிபுரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளின் தேவைகளை அனைத்தும் துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாக உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கண்டாச்சிப்புரம் தாலுக்காவிற்கு உட்பட்ட முககையூர் கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அவர் அங்கு திமுக சார்புல் முகையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்பம் சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டியை அமைச்சர் முன் வழங்கப்பட்டது.
இதே போல் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், திமுக நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.