கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து மணலூர்பேட்டை வரை செல்லும் அரசு நகரப் பேருந்து (தடம் எண் 4) இயக்கப்பட்டு வருகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில், இந்தப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில், படிக்கட்டில் தொங்கியபடியும், ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதுபோன்று பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதால், விபத்து ஏற்படும் என, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதைத் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் நேரங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி பயணிகளும் வலியுறுத்தியுள்ளனர்,