விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் புதிய காலனியில் 280 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த அழுத்த மின்சாரம் இருந்து வந்ததால் மழை மற்றும் புயல் காலங்களில் ஓரிரு தினங்களுக்கு மின்சாரம் இருக்காது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து இளந்துரை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பாபு, மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து ரூ.9 லட்சம் மதிப்பில் 63 கே.வி திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா உதவி செயற் பொறியாளர் பாக்யராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசு அதிகாரிகள் போது மக்கள் உடன் இருந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பாபு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.