விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா குப்புசாமி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்.எல்.ஏ,வுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்தனர். பின்னர் கணபதி பூஜையுடன் தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை, தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோபூஜை, 3 கால யாகசால பூஜை, விசேஷ ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை அடுத்து ஸ்ரீ பெரியாயி அம்மன், ஸ்ரீ பாவாடைராயன், ஸ்ரீ பரிவார சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அன்னதானம் வழங்கப்பட்டது சாமி தரிசனம் கொண்டனர்.
திமுக கிழக்கு ஒன்றியம் செயலாளர் சந்திரசேகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிவிஆர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.