அரகண்டநல்லூர் அரசு பள்ளி மைதானத்தில் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி:
இன்று தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம் எல் ஏக்கள் லட்சுமணன்,புகழேந்தி, ஆட்சியர் பழனி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
அமைச்சர் பொன்முடி மேடை பேச்சு:-
இடைதரர்கள் இருக்க கூடாது என்பதற்காக வங்கிகணக்கில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 3500 நபர்களுக்கு இன்று வழங்கப்படுவதாகவும், கட்சி பாகுபாடில்லாமல் தகுதியுள்ளவர்களுக்கு உதவி தொகை வழங்க உத்தரவிட்டவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் காலையில் சிற்றுண்டி, மகளிருக்கு உரிமை தொகை, கல்லூரி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்ட உதவி தொகை என பலவேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்று அறிவித்ததால் தால் இன்று மூன்று பெண்கள் அர்ச்சராகியுள்ளதாகவும், ஆணாதிக்கத்தை மாற்றி ஆணும் பெண்ணும் சமம் என்று கொண்டு வந்தது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் தமிழகத்தில் மகளிருக்கான ஆட்சி நடைபெறுவதால் பொதுமக்கள் என்றும் நல்லாதரவு தரவேண்டுமென தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பெண்கள்,அரசு அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.