வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில்...
Read moreஇது சற்றே விநோதமான வழக்கு, 2013 யில் இருந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், மூத்த...
Read moreபிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு...
Read moreரூபாய் 1,999/- டவுன்பேமெண்ட் செலுத்தி ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை வாங்கிக் கொள்ளலாம். மீதத் தொகையை சரிவிகித மாத தவணை மூலம் செலுத்திக் கொள்ளலாம். ஜியோ நெக்ஸ்ட்...
Read moreகடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை அருகே நடுகடலில் சொகுசு கப்பலில் ரெவ் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்...
Read moreகிராம ஊராட்சி பதிவேடு எண்.1 வீட்டு வரி கேட்பு தொகைக்கான அறிவிப்பு:வீட்டு உரிமையாளர்களின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன்...
Read moreபோலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது. எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா, "உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.
Read moreதமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1. தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2. தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: • உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். • அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3. மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4. இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read moreநாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு, எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. எல்பிஜி மானியம், தானியங்கி முறையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு 2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும். இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: நாட்டில் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி: தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Read moreமக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் குறித்தத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவண அலுவலகம், ‘கிரைம் இன் இந்தியா’ எனும் அதன் வருடாந்திர வெளியீட்டில் அத்தகவல்களை வழங்குகிறது. இதன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ம் அண்டில் 1554 பேரும், 2018-ம் ஆண்டில் 1421 நபர்களும், 2019-ம் வருடத்தில் 1948 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் (2019), 2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்டு, 2020 ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டைத் தயாரிப்பதற்கான எந்த முடிவையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொடர்பான நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.