சிவில் விமானப் போக்குவரத்து துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அரசு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. *இந்திய விமான நிலைய ஆணையரகம் சார்பில் அடுத்த வரவுள்ள 4 முதல் 5 ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யவும், மாற்றங்கள் ஏற்படுத்தவும், விமான ஓடுதளங்களை வலுப்படுத்தவும், விமான நிலையங்களுக்கான திசைகாட்டு கருவிகள், கட்டுப்பாட்டு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் ரூ.25,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. *நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதுவரை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி, மேற்கு வங்கத்தில் துர்காபூர், சிக்கிமில் பாக்யாங் (Pakyong), கேரளாவில் கண்ணூர், ஆந்திராவில் ஓர்வக்கல் (Orvakal) மற்றும் கர்நாடக மாநிலம் கல்புரகி ஆகிய 6 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. *விமான போக்குவரத்து துறையில் மேலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறை மீட்பு நடவடிக்கைகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இக்காலகட்டத்தில், மத்திய அரசால் விமான போக்குவரத்து துறையை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு: *விமான நிறுவனங்களுக்கு ஏராளமான கொள்கை நடவடிக்கைகள் மூலம் உதவுவது *விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய விமான நிலைய ஆணையரகம் மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் வழங்குவது *ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களிலும், புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள விமான நிலையங்களிலும் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் *சிறப்பான விமான திசைகாட்டு அமைப்புகள் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் உள் நாட்டு விமானப் போக்குவரத்து, கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதமாக உள்ளது. வந்தே பாரத் திட்டம் வந்தே பாரத் திட்டம் 07.05.2020 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், 24.07.2021 வரை 88,000 விமானங்கள் இயக்கப்பட்டு , 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 71 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
Read moreசிறார் நீதி (குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வரவேற்றார் மற்றும் இதை அடிமட்ட அளவில் தீவிரமாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, குடியரசு துணைத் தலைவரை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தபோது, திரு. வெங்கையா நாயுடு இந்த கருத்துக்களை தெரிவித்தார். பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பல கோரிக்கை மனுக்களை பெற்றதாக குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சிறார் நீதி சட்ட திருத்தம், 2021-ன் சிறப்பம்சங்கள் குறித்து, குடியரசு துணைத் தலைவருக்கு, மத்திய அமைச்சர் விளக்கினார். தத்தெடுக்கும் முறைகளை விரைவுபடுத்தவும் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பை உறுதி செய்யவும் சமீபத்திய சட்ட திருத்தம், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவரிடம் திருமதி. ஸ்மிருதி இரானி தெரிவித்தார். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு அமல்படுத்தும் உதவி மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பலவற்றை அவர் குறிப்பிட்டார். ஆதரவற்ற குழந்தைகள் மீது தனக்கு எப்போதும் பரிவு இருப்பதாக கூறிய திரு வெங்கையா நாயுடு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது சமூகம் மற்றும் அரசின் ஒட்டுமொத்த பொறுப்பு என வலியுறுத்தினார். சமீபத்தில், ஆதரவற்ற குழந்தைகள், குடியரசு துணைத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
Read moreடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங்...
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.22 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,08,57,467 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35%. கடந்த 24 மணி நேரத்தில் 36,946 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர்...
Read moreநாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர்கள் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் திரு அஷ்வினி குமார் சவுபே, கீழ்க்காணும் தகவல்களை அளித்தனர்: 2021 மே முதல் நவம்பர் வரையிலான ஏழு மாத காலக் கட்டத்தில் விநியோகிப்பதற்காக 278 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு இவை இலவசமாக வழங்கப்படும். இதேபோன்று, 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத கால கட்டத்திற்கு, சுமார் 80 கோடிப் பயனாளிகளுக்கு 322 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மத்திய தொகுப்பிலிருந்து ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் 19,410 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் விதிகளை மீறுவது சட்டப்பூர்வக் குற்றமாகும். பிரத்யேகமாக அரைக்கப்பட்ட அரிசியின் கொள்முதல் வேகமாக நடைபெற்று வருகிறது. 2021 ஜூலை 20 வரை 128.53 லட்சம் மெட்ரிக் டன் பிரத்தியேகமாக அரைக்கப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்துள்ளது. முந்தைய வருடம் செய்யப்பட்ட கொள்முதல் 107.79 லட்சம் மெட்ரிக் டன்னாகும். அரிசி கொள்முதலுக்காக ஆங்காங்கே சேமிப்பு மையங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, விடுமுறை நாட்களிலும் பணியாளர்களைப் பணியில் அமர்த்தி, அரிசி ஆலை உரிமையாளர்களை ஒன்றிணைத்து, சரக்குகளைத் துரிதமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், 2021 ஜூலை 14 வரை சுமார் 400.703 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று வருடங்கள் ஆன 2020-21 மற்றும் 2021-22-ல் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் மொத்தம் 600.814 லட்சம் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2021 ஜூலை 1 நிலவரப்படி 603.56 லட்சம் டன்கள் கோதுமையும் 296.89 லட்சம் டன்கள் அரிசியும் மத்திய தொகுப்பில் உள்ளன. மொத்தம் 900.45 லட்சம் டன்கள் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்களால் கடந்த மூன்று வருடங்களில் 3.20 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 படி, நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக மூன்று அடுக்கு நீதி வழங்கும் செயல்முறை நிறுவப்பட்டுள்ளது. மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் ஆணையங்கள் செயல்படுகின்றன. நாடு தழுவிய பிரச்சாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Read moreநாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார். மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் படி, 2020 மே 29 அன்று மொத்தம் 8532 மருந்து நிறுவனங்கள் நாடு முழுவது இயங்கி வந்தன. இவற்றில் தமிழ்நாட்டில் 514 நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்திய உர நிறுவனத்தின் டால்ச்சர் ஆலைக்கு புத்தாக்கம் தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ், கெயில் இந்தியா லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட், ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட், 2015 நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நேரடி வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 510 மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 4500 ஆகும். அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலைகளில் உரம் வழங்கப்படுகிறது. பி&கே உரங்களின் மானிய விகிதம் 2020-21-ம் வருடத்தில் 22.49 சதவீதம் முதல் 28.97 சதவீதம் வரை இருந்தது. 45 கிலோ பை ஒன்றுக்கு ரூ 242 எனும் அதிகபட்ச விற்பனை விலையில் உரம் விற்கப்படுகிறது (வேப்பம்பூச்சு மற்றும் வரிகள் தவிர்த்து). ஊட்டச்சத்துச் சார்ந்த மானியக் கொள்கை, புதிய முதலீட்டுக் கொள்கை, புதிய உரக் கொள்கை ஆகியவற்றை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பாரசெட்டமால், டெக்சாமெத்தாசோன், மெத்தைல் பிரெட்னிசோலோன், ஐவிஐஜி, எனோக்சாபாரின், புடேசோனைட், ஹெபாரின் மற்றும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட 355 மருந்துகள் மற்றும் 882 மருத்துவ முறைகளுக்கு அதிகபட்ச விலைகளை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான விலையையும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கட்டுப்படுத்தியுள்ளது. ஆக்சிமீட்டர், குளூக்கோமீட்டர், ரத்த அழுத்த மானி, நெபுலைசர், டிஜிட்டல் தெர்மோமீட்டர் உள்ளிட்டவற்றின் விலைகளும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. 2021 ஜூலை 13 அன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொவிட் பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றைக் கையாள்வதற்காக போதிய மருந்துகளைக் கைவசம் வைத்திருக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2021 ஜூலை 13 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடிதம் எழுதியது. தேசிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் அறிவியல் மற்றும் நோயியல் ஆதாரங்களின் அடிப்படையிலும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பயனிகளுக்கு 2021 டிசம்பருக்குள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துகளுக்கான உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆறு வருடங்களில் ரூ 1,96,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 20,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 80,000 மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்புரிமைப் பெற்ற மருந்துகள் மற்றும் இதர அதிக மதிப்புடைய மருந்துகளுக்கு விற்பனையில் 10 சதவீதம் எனும் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
Read moreகாஷ்மீர் இளம் தலைமுறையினர் தங்களின் வளமான மரபிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வலியறுத்தினார். காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில், இன்று நேரடியாக...
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 44.61 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,06,63,147 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 41,678 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,436 ஆக உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.27 சதவீதமாகும். வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.36 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 5 சதவீதத்திற்கும் குறைவாக 2.51 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.09 கோடியாக அதிகரித்துள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 40 கோடிக்கும்...
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 42.78 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,05,03,166 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 35,087 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேர்...
Read moreமத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக எல்லையை ஜூலை 13 தேதியிட்ட அறிவிக்கையில் தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து உபகரணங்கள் பின்வருமாறு:...
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.