நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை அளித்தார். விவசாயிகளின் விளைப்பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு & வசதியளிப்பு) சட்டம் 2020 மற்றும் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020 ஆகியவற்றின் கீழ் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் சிறப்பான தீர்வை தீர்வுகாணும் வாரியம் மற்றும் துணை மண்டல அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரால் காண்பதற்காக, துணை மண்டல அளவிலான செயல்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துணை மண்டல அளவிலான அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நில வருவாய், நில ஆவணங்கள் மற்றும் பயிர் மற்றும் நில பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றில் போதுமான கள அனுபவம் இருப்பதால், வேளாண் சட்டங்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். பரம்பராகத் கிரிஷி விகாஸ் திட்டத்தின் துணை திட்டமாக பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதியை 2020-21 முதல் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பாரம்பரிய உள்நாட்டு செயல்முறைகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், குழு உருவாக்கம், திறன் வளர்த்தல், நிபுணர்களின் வழிகாட்டுதல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஆய்வுக்காக ஒரு ஹெக்டேருக்கு மூன்று வருடங்களுக்கு ரூ 12,200 வழங்கப்படுகிறது. எட்டு மாநிலங்களில் உள்ள 4.9 லட்சம் ஹெக்டேருக்கு ரூ 4980.99 லட்சம் இது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2000 ஹெக்டேருக்கு ரூ 31.82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதுதில்லியில் உள்ள பூசாவில் தாவர ஆணைய கட்டிடத்திற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தாவர வகைகளையும், விவசாயிகளின் உரிமைகளையும் தாவர ஆணையம் பாதுகாக்கும் என்றார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர் எளிதாக அணுகும் வகையில் புதிய கட்டிடம் இருக்கும் என்று கூறினார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்கள் திரு கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமிகு ஷோபா கரந்த்லாஜே, செயலாளர் திரு சஞ்சய் அகர்வால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசிய விவசாயிகள் நல திட்ட செயல்படுத்துதல் குழு அலுவலகத்தையும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகளை தற்சார்பு நிலையை எட்ட செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறினார். பிரதமரின் விவசாயிகள் திட்டம், கிசான் மாந்தான் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இதர திட்டங்களின் செயல்படுத்துதலின் கண்காணிப்பு மையமாக தேசிய விவசாயிகள் நல திட்ட செயல்படுத்துதல் குழு திகழும் என்று அவர் கூறினார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்கள் திரு கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமிகு ஷோபா கரந்த்லாஜே, செயலாளர் திரு சஞ்சய் அகர்வால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Read moreநீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. நீட் (முதுநிலை மற்றும் நீட் (இளநிலை) 2021 தேர்வுகள் 2021 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த தேர்வுகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொவிட் நெறிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்படும். மேலும், தேர்வை பாதுகாப்பாக நடத்த தேர்வு எழுதுவோர் மற்றும் நடத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன. கூட்டம் மற்றும் நீண்ட பயணத்தை தவிர்க்க நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொவிட் இ-பாஸ்-உடன், நுழைவுச் சீட்டு வழங்கப்படுகின்றன. தேர்வு மையங்களுக்குள் விண்ணப்பதாரர்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும். நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு, இதற்காக அமைக்கப்படும் தனிமை மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, முக தடுப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். தேர்வு மையத்துக்கு வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் / மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களுக்கு உதவி: கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றன. கொவிட்-19 அவசரகால மீட்பு மற்றும் சுகாதார தயார்நிலை நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.15,000 கோடிக்கு மத்திய அமைச்சரவை 2020ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார திட்டம் மூலமாக ரூ.8257.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு தொகை ரூ.110.60 கோடியும் அடங்கியுள்ளது. மாநிலம் வாரியான விவரங்கள் இணைப்பு 1-ல் உள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி போட, செயல்பாட்டு தொகையும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பு 2-ல் உள்ளது. அரிய வகை நோய்கள் கொள்கை: அரியவகை நோய்களுக்கான தேசிய கொள்கை இறுதி செய்யப்பட்டு பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொள்கையை இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் காணலாம். https://main.mohfw.gov.in/documents/policy. ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தடுப்பு யுக்தி அடிப்படையில் அரியவகை நோய்களை குறைப்பதை இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது....
Read moreமூன்று நாளில் இரண்டாவது முறையாக புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், டிஆர்டிஓ இன்று காலை 11.45 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது. இந்த பரிசோதனையை விமானப்படை அதிகாரிகள் குழுவும் பார்வையிட்டது. இந்த ஏவுகணை வானில் அதிவேகத்தில் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் உடையது. இந்திய விமானப்படைக்கு இது நிச்சயம் வலு சேர்க்கும். கடந்த ஜூலை 21ம் தேதியும், ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூன்று நாள் இடைவெளியில், 2வது முறையாக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதற்கு, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, மற்றும் ஏவுகணை தயாரிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த நவீன ஏவுகணை உருவாக்கியுள்ளது, இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும். அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 42.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், இதுவரை 3,04,68,079 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,740 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 35,342 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.30% ஆகும். வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.14% ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 32 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.12%, ஆகப் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.29 கோடி ஆகும்.
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 39.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், இதுவரை 3,01,43,850 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.28% ஆக அதிகரித்துள்ளது....
Read moreஇந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 39 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை ஏழு மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 49,41,567 முகாம்களின் மூலம் மொத்தம் 39,13,40,491தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், 3,01,43,850பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,130தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். தேசிய குணமடையும் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 18-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 4,32,041ஆக உள்ளது. இது மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 1.39 விழுக்காடு மட்டுமே. கடந்த 24 மணி நேரத்தில் 19,43,488 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.80 கோடியைக் கடந்து, 43,80,11,958ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.21% ஆகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.15% ஆகவும் தற்போது உள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக தொற்று உறுதி விகிதம் 3 விழுக்காட்டுக்கு குறைவாகவும், 38-வது நாளாக 5 விழுக்காட்டுக்கு குறைவாகவும் உள்ளது.
Read moreநாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் என்டிபிசி அமைக்கவுள்ளது. தேசிய அனல் மின் நிறுவனத்தின்(என்டிபிசி) 100 சதவீத துணை நிறுவனம், என்டிபிசி...
Read moreபிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொவிட்-19 நிலவரம் குறித்து இன்று கலந்துரையாடினார். நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். கொவிட் பெருந்தொற்றை உரிய நேரத்தில் கையாண்டதற்காக பிரதமருக்கு முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் வழங்கியதற்காக பிரதமரை அவர்கள் பாராட்டினர். உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரம், வட கிழக்கு மாகாண வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களும் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர். தங்களது மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்தும், தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசிகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர்கள் விளக்கமளித்தனர். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயங்குவது தொடர்பான பிரச்சனை மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். கொவிட் தொற்றை சமாளிப்பதற்காக மருத்துவ உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணத்தால் (பிஎம் கேர்ஸ்) அளிக்கப்பட்ட ஆதரவு பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். தங்களது மாநிலங்களில் தொற்று உறுதி விகிதம் மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். ஒட்டுமொத்த அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி உள்துறை அமைச்சர் பேசினார். எனினும், இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் ஒரு சில பகுதிகளில் தொற்று உறுதி விழுக்காடு அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பரிசோதனை, தடம் அறிதல், கண்காணித்தல் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கொவிட் பாதிப்புகள் குறித்த ஒட்டுமொத்த பார்வையை சுகாதாரத்துறை செயலாளர் முன் வைத்ததோடு, ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் தொற்று உறுதி வீதம் உயர்ந்திருப்பது பற்றியும் ஆலோசித்தார். மருத்துவப் பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்த அவர், தடுப்பூசியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். கூட்டத்தில் பேசிய பிரதமர், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மாநிலங்களின் கடினமான நிலப்பரப்பையும் பொருட்படுத்தாது பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகத் தீவிரமாக உழைத்த வடகிழக்கு மாநிலங்களின் மக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசுகளைப் பாராட்டினார். ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், இந்த சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மிகச்சிறிய அளவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையை சமாளிப்பதற்காக மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான நெறிமுறைகளைப் பயன்படுத்துமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். விரைவாக உருமாறும் தன்மையுடைய தொற்று குறித்துப் பேசிய பிரதமர், தொற்றின் உருமாறும் தன்மையையும் அனைத்து மாறுபாடுகளையும் தீவிரமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். மாறுபாடுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். கொவிட் சரியான நடத்தை விதிமுறையை வலியுறுத்திய அவர், இதுபோன்ற சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கூறினார். தனிநபர் இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்றவற்றின் பயன்பாடு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அதேபோல பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய உத்திகளும் நிரூபணமாகியுள்ளன. சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் பெருந்தொற்றின் தாக்கம் குறித்துப் பேசிய பிரதமர், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு எதிராக கடுமையாக எச்சரித்தார். மூன்றாவது அலை துவங்குவதற்கு முன்பு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள் என்ற கூற்றை நிராகரித்த அவர், மூன்றாவது அலை தானாகவே உருவாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மூன்றாவது அலையை எவ்வாறு தடுப்பது என்பதுதான் நமது மனதில் எழும் முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அஜாக்கிரதை மற்றும் கூட்ட நெரிசலால் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இதுபற்றி நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தவிர்க்கக்கூடிய நெரிசலைத் தடுக்க வேண்டும் என்று அவர் தீவிரமாக வலியுறுத்தினார். ‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து' என்ற மத்திய அரசின் பிரச்சாரத்தில் வடகிழக்குப் பகுதியும் சம அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதாகவும், எனவே தடுப்பூசித் திட்டத்தைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். தடுப்பூசி பற்றியும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது பற்றியும் எழுப்பப்படும் தவறான செய்திகளை எதிர்கொள்வதற்காக, சமூக, கல்வி நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் தடுப்பூசித் திட்டத்தை அதிகப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 23,000 கோடி தொகுப்பிற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், வடகிழக்குப் பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தத் தொகுப்பு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். பரிசோதனை, சிகிச்சை, மரபியல் மாறுபாடுகளை இந்தத் தொகுப்பு விரைவுபடுத்தும். வடகிழக்குப் பகுதிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, பிராணவாயு வசதி மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவின் உள்கட்டமைப்பை துரிதமாக அதிகரிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான பிராணவாயு ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், வட கிழக்குப் பகுதிகளிலும் 150 ஆலைகள் நிறுவப்படவிருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்த ஆலைகளின் பணியை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்தார். வடகிழக்குப் பகுதிகளின் புவி சார்ந்த நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக மருத்துவமனைகள் அங்கு அமைக்கப்படுவதன் தேவையை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். பிராணவாயு ஆலைகள், அவசர கட்டுப்பாட்டுப் பிரிவுகள், புதிய இயந்திரங்கள் போன்றவை இரண்டு வட்டார அளவிலான மருத்துவமனைகளுக்கு விரைவில் வழங்கப்படவிருப்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார். பரிசோதனையின் திறன் நாளொன்றுக்கு 20 லட்சம் பரிசோதனைகளாக இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரிசோதனை வசதிக்கான உள்கட்டமைப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். நோக்கின்றி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுடன், தீவிர பரிசோதனைகளையும் அவர் வலியுறுத்தினார். ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் வாயிலாக தொற்றின் பரவலை நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
Read moreநாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள், 48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 41,506 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது....
Read moreவாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.