நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு, எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. எல்பிஜி மானியம், தானியங்கி முறையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு 2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும். இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: நாட்டில் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி: தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Read moreமக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் குறித்தத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவண அலுவலகம், ‘கிரைம் இன் இந்தியா’ எனும் அதன் வருடாந்திர வெளியீட்டில் அத்தகவல்களை வழங்குகிறது. இதன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ம் அண்டில் 1554 பேரும், 2018-ம் ஆண்டில் 1421 நபர்களும், 2019-ம் வருடத்தில் 1948 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் (2019), 2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்டு, 2020 ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டைத் தயாரிப்பதற்கான எந்த முடிவையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொடர்பான நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
Read moreஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மக்களவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு.ஏ.நாராயணசாமி, சுஷ்ரி பிரதிமா பூமிக் ஆகியோர் எழுத்துபூர்வமாக இன்று பதில் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நேரடி வேலைவாயப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய, ஓபிசி மாணவர்களுக்கு மெட்ரிக் வகுப்புகுகளுக்கு முன்னும், பின்னும் கல்வி உதவித் தொகைகள், வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடனில் வட்டி மானியம் அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித் தொகை, மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் கட்டித் தருதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் உதவி, தொழில் தொடங்க மூலதன நிதி, குறைந்த வட்டியுடன் கூடிய கடனுதவி திட்டங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மத்திய வேலை வாய்ப்பு மற்றம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. போதை மறுவாழ்வு மையங்களில் ஆய்வு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இ-அனுதான் இணையதளம் (https://grants-msje.gov.in) தகவல்படி, 2019-20-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள 65 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில், மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களின் பரிந்துரைப்படி அந்த அமைப்புகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிதிவழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியர்களுக்கான ஒதுக்கீடு: தற்போதுள்ள பட்டியலினத்தனர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத ஒதுக்கீடு உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மிசோரம், தில்லி, ஜம்மு காஷ்மீர், கோவா, அசாம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதன் விவரம் கிடைக்கவில்லை. மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து, காலியிடங்களை நிரப்பி வருகிறது. அவற்றின் விவரம் இணைப்பில் -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுக்கும் குழந்தைகள்: இந்தியப் பதிவாளர் இணையளத்தில் உள்ள தகவல் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 29,237-ஆக உள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கான திட்டங்கள்: நலிவடைந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு உதவ, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ‘ஸ்மைல்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வக்கான துணைத் திட்டமும் உள்ளது. இதில் பிச்சை எடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மருத்துவ வசதி அளிப்பது, ஆலோசனை வழங்குவது, கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கார்பரேஷனுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1.50 கோடியை வழங்கியுள்ளது. பிச்சை எடுத்து வந்த 514 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.182 கோடி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு: மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுபவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் இன்னமும் இருப்பதாக சில தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான ஆதாரங்களை நிருபிக்க முடியவில்லை. கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 309 பேர் கடந்த 5 ஆண்டுகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மாநிலம் வாரியாக இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் கைகளால் கழிவுகளை அகற்றும் இரு துப்புரவு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, 2013-ஆம் ஆண்டுக்கு முன், கைகளால் கழிவுகளை அகற்றிய துப்புரவுத் தொழிலாளர்களின் விவரம்: 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக கைகளால் கழிவுகளை அற்றிய தொழிலாளர்கள் மாநில வாரியாக இணைப்பு-1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், நிதியுதவி அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இதில் இடம் பெற்றள்ளது. மராத்தா பிரவினருக்கான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது. அரசியல் சாசன திருத்தப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் இல்லை என கூறியது. இந்த பட்டியலைப் பராமரிக்கும் மாநிலங்களுக்கான அதிகாரத்தைத் திரும்ப பெற, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Read more2021-22-ஆம் ஆண்டிற்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆர்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில், ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது. இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி, தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது. பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி (41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம்.
Read moreகடந்த 3 ஆண்டுகளில், மொத்தம் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார். அவர் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நாட்டில் மின்சார வாகனங்களுக்கு விரைவில் மாறவும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India (FAME India) ஃபேம் இந்தியா திட்டம் 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது இரண்டாவது ஃபேம் இந்தியா திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த பட்ஜெட் உதவி ரூ.10,000 கோடி. இந்த இரண்டாவது கட்டத்தில் 7090 மின்சார பஸ்கள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 மின்சார கார்கள், 10 லட்சம் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களை தயாரிக்க 38 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் விவரம் இணைப்பு -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. * ஃபேம் -2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
Read moreடோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி...
Read more2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி. பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில் சாதனை புரிந்த/ சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx விவரங்கள் மற்றும் உதவிக்கு, இந்த போன் எண்களை தொடர்பு கொள்ளவும்: 011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786
Read moreநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 50.68 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,10,99,771 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39%. கடந்த 24 மணி நேரத்தில் 43,910 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேர் புதிதாகப்...
Read moreஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக இன்று முடித்தது. இதற்காக இந்த கப்பல் கொச்சியிலிருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது. கடல் பரிசோதனைகள்...
Read moreமுதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள்...
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.