இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே...
Read moreவெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம்.41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஹாக்கியில் 12-ஆவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு எனது பாராட்டுகள்....
Read more2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது...
Read moreநாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், கீழ்காணும் தகவல்களை அளித்தார். புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இதில் அடங்கும். 814 நிலையங்களில் இது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியை துரிதப்படுத்துவதற்காக சில மண்டல ரயில்வேக்கள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கிடையே பணிகள் பகிரப்பட்டுள்ளன. 2020 ஜூன் 20 அன்று அறிவிக்கப்பட்ட ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம், 2020 அக்டோபர் 22 வரை 125 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டது. ரயில்பாதைகளை இரட்டை தடமாக்குதல், மின்மயமாக்குதல், புதிய தடங்களின் கட்டுமானம், பாலங்களின் கட்டுமானம், சிக்னல் பணிகள் உள்ளிட்ட 143 உள்கட்டமைப்பு திட்டங்களை ஆறு மாநிலங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் துரிதப்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்தது. பிகாரில் 36 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஜார்கண்டில் 28 உள்கட்டமைப்பு திட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 6 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஒடிசாவில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களும், ராஜஸ்தானில் 53 உள்கட்டமைப்பு திட்டங்களும், உத்தரப் பிரதேசத்தில் 143 உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, 14,14,604 மனித பணி நாட்கள் உருவாக்கப்பட்டன. ரயில்வே வசதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு தானியங்கி முறையில் கீழ் படுக்கையை ஒதுக்கீடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி, ஐஆர்சிடிசியின் ஆன்லைன் தளமான irctc.co.in மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்டவை சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
Read more14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்க! பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு புதிய அறிவுரையை வழங்குக! எதிர்காலத்தில் உறுப்பு 161 இன்...
Read moreசிவில் விமானப் போக்குவரத்து துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அரசு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. *இந்திய விமான நிலைய ஆணையரகம் சார்பில் அடுத்த வரவுள்ள 4 முதல் 5 ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யவும், மாற்றங்கள் ஏற்படுத்தவும், விமான ஓடுதளங்களை வலுப்படுத்தவும், விமான நிலையங்களுக்கான திசைகாட்டு கருவிகள், கட்டுப்பாட்டு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் ரூ.25,000 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. *நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதுவரை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி, மேற்கு வங்கத்தில் துர்காபூர், சிக்கிமில் பாக்யாங் (Pakyong), கேரளாவில் கண்ணூர், ஆந்திராவில் ஓர்வக்கல் (Orvakal) மற்றும் கர்நாடக மாநிலம் கல்புரகி ஆகிய 6 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. *விமான போக்குவரத்து துறையில் மேலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறை மீட்பு நடவடிக்கைகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகள் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இக்காலகட்டத்தில், மத்திய அரசால் விமான போக்குவரத்து துறையை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு: *விமான நிறுவனங்களுக்கு ஏராளமான கொள்கை நடவடிக்கைகள் மூலம் உதவுவது *விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய விமான நிலைய ஆணையரகம் மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் வழங்குவது *ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களிலும், புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள விமான நிலையங்களிலும் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் *சிறப்பான விமான திசைகாட்டு அமைப்புகள் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் உள் நாட்டு விமானப் போக்குவரத்து, கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதமாக உள்ளது. வந்தே பாரத் திட்டம் வந்தே பாரத் திட்டம் 07.05.2020 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், 24.07.2021 வரை 88,000 விமானங்கள் இயக்கப்பட்டு , 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 71 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
Read moreசிறார் நீதி (குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வரவேற்றார் மற்றும் இதை அடிமட்ட அளவில் தீவிரமாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, குடியரசு துணைத் தலைவரை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தபோது, திரு. வெங்கையா நாயுடு இந்த கருத்துக்களை தெரிவித்தார். பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பல கோரிக்கை மனுக்களை பெற்றதாக குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சிறார் நீதி சட்ட திருத்தம், 2021-ன் சிறப்பம்சங்கள் குறித்து, குடியரசு துணைத் தலைவருக்கு, மத்திய அமைச்சர் விளக்கினார். தத்தெடுக்கும் முறைகளை விரைவுபடுத்தவும் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பை உறுதி செய்யவும் சமீபத்திய சட்ட திருத்தம், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவரிடம் திருமதி. ஸ்மிருதி இரானி தெரிவித்தார். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு அமல்படுத்தும் உதவி மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பலவற்றை அவர் குறிப்பிட்டார். ஆதரவற்ற குழந்தைகள் மீது தனக்கு எப்போதும் பரிவு இருப்பதாக கூறிய திரு வெங்கையா நாயுடு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது சமூகம் மற்றும் அரசின் ஒட்டுமொத்த பொறுப்பு என வலியுறுத்தினார். சமீபத்தில், ஆதரவற்ற குழந்தைகள், குடியரசு துணைத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
Read moreதமிழகத்தில் உள்ள வெல்லிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் 77வது பயிற்சியை நிறைவு செய்த, பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 4, 2021) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது பாதுகாப்பு படைகள், நமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது என்றார். அயராத முயற்சிகள் மற்றும் சிறந்த தியாகத்தால், பாதுகாப்பு படையினர் நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். போர் மற்றும் அமைதிக் காலத்தில், அவர்கள் நாட்டுக்கு மதிப்பற்ற சேவைகளை வழங்கியுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சாவல்களை சந்திக்கும்போதும் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களிலும், அவர்கள் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் செய்துள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் கூறுகையில், சமீபத்திய காலம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் மிகவும் சிரமமாக இருந்து வருகிறது என்றார். இந்த பெருந்தொற்று, அனைத்து தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையிலும், கொவிட்-19 பெருந்தொற்றை சமாளிப்பதிலும், நமது பாதுகாப்புடையினரின் மிகச் சிறந்த உறுதியை அவர் பாராட்டினார். கொவிட் சவால்களை எதிர்கொண்டதில், பாதுகாப்பு படையினரில் பெரும்பாலானோர், முன்கள பணியாளர்களாக இருந்தனர். அவர்களின் உறுதி மற்றும் பங்களிப்பை நாடு போற்றுகிறது. மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் கூறினார். தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகள் பற்றி கருத்துக்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. புவி-யுக்தி மற்றும் புவி- அரசியல் கட்டாயங்கள் மற்றும் பல காரணிகள் பாதுகாப்பு நிலவரத்தை அதிக சிக்கலாக்கியுள்ளது. அதனால், பயிற்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுக்கு, மாறும் சூழலை புரிந்துகொள்ள உதவும் வகையில் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் அவர்களால், நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் பாதுகாப்பு விஷயங்களின் அவர்களின் பங்கை பயிற்சி அதிகாரிகளால் அடையாளம் காண முடியும் என அவர் கூறினார். 21ம் நூற்றாண்டு சமூகம் அறிவார்ந்த சமூகமாக உள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். இந்த நூற்றாண்டில் அறிவு உண்மையிலேயே சக்தி வாய்ந்ததாக உள்ளது. அறிவு பொருளாதார யுகத்தில் நாம் இருக்கிறோம் என கூறப்படுவதுபோல், நாம் அறிவு போர் யுகத்திலும் இருக்கிறோம். பாதுகாப்பு பணியாளராக, ராணுவ அதிகாரிகள், அறிவார்ந்த வீரர்களாக இருக்க வேண்டும். ராணுவ பயிற்சி கல்லூரியில், அதிகாரிகள் கற்றது, தேவையான திறன்களை ஊக்குவிக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பயிற்சி, எதிர்காலத்தில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளை தயார்படுத்தும். சிறந்த தொழில்நுட்பங்கள், நவீன யுக்திகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கற்பது, பயிற்சி அதிகாரிகளை சிறந்த வல்லுனர்களாக்கும் என குடியரசுத் தலைவர் கூறினார்.
Read moreதமிழில் சில வார்த்தைகளுடன் எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன். இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் திரு மு கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது...
Read moreடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங்...
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.