செய்திகள்

நாட்டில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள்,  48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன.  கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 41,506 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது....

Read more

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும்  பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி  3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

Read more

ரூ. 91 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 23 நிறுவனங்கள்: 3 பேர் கைது.

உளவுப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மேற்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரிவின் அதிகாரிகள்...

Read more

தமிழகம், புதுச்சேரி ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு .

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறை கூறியுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, குஜராத் பிராந்தியம், மத்திய மகாராஷ்டிரா, கடலோர...

Read more

மக்களின் பத்ம விருதுக்கு எழுச்சியூட்டும் நபர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கோரிக்கை.

அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்....

Read more

நிலையான விவசாயத்தை அடைய வேளாண் பொருட்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பதும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் உதவிகளை வழங்குவதும் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்.

நாட்டில் நிலையான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வேளாண் பொருட்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பதும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தகுந்த கடன் உதவிகளை வழங்குவதும் மிகவும் அவசியம் என்று குடியரசு துணைத்...

Read more

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள்  தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்பத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது. மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர். இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களை பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின்  போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 66.28 கோடி மதிப்பிலான மல்லிகை பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்பத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான  புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் ‘மல்லிகை தலைநகரமாகவும்' வளர்ந்துள்ளது.

Read more

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

Read more

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம்...

Read more

செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என காங்கிரஸ் தலைவர் விழுப்புரத்தில் பேச்சு.

செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விழுப்புரத்தில் பேச்சு. தமிழக அரசின்...

Read more
Page 27 of 29 1 26 27 28 29

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.