பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் முடங்கியது. கடந்த சில மணி நேரங்களாக சேவைகள் முடங்கியதால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்....
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சிவனார்தாங்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வம்....
Read moreஅஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக அஞ்சல் துறை பல்வேறு கூடுதல் வசதிகளை, கட்டணமின்றி அளித்து வருகிறது. ஏடிஎம் அட்டை: கட்டணமின்றி வழங்கப்படும் இந்த ஏடிஎம்...
Read moreஇந்திய கடற்படைக்காக கொச்சின் கப்பல் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் சவாலான போர் கப்பலான விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் தனது முதல் கடல் பரிசோதனைக்கு புறப்பட்டது குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பாராட்டு தெரிவித்தார். விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே கட்டமைப்பது மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முன்னெடுப்புகளின் உண்மையான பிரதிபலிப்பாக இது விளங்குவதாக கூறினார். நாட்டை பெருமைப்படுத்தியதற்காக இந்திய கடற்படை மற்றும் கொச்சின் கப்பல் தளத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலான இந்த விமானம் தாங்கி கப்பல் 40,000 டன் எடை கொண்டதாகும். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 21,500 டன்கள் சிறப்பு ரக எஃகு, இந்திய போர் கப்பல்களிலேயே முதல்முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோமீட்டர்கள் நீள கேபிள்கள், 120 கிலோமீட்டர்கள் நீள பைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலமும், 2300 அறைகள் இதில் இருப்பதன் மூலமும் இதன் பிரமாண்டத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு சிறிய மிதக்கும் நகரமாக காட்சியளிக்கும் இக்கப்பலில், இரு கால்பந்து மைதானங்களின் அளவுக்கு விமானங்களை நிறுத்தும் இடம் இருக்கிறது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்துடன் இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Read moreநாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் பதிலளித்தார். கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் குறித்த திருமதி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடலோர மற்றும் கடல்புற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக கூறினார். அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை என்ற நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கையை பின்பற்றி வரும் அரசு, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய, மக்கள் சார்ந்த பிராந்திய கட்டமைப்புகளை நிலைத்தன்மை மற்றும் வளத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கி வருவதாக அமைச்சர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் சார்ந்த விஷயங்களை அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாகவும், அவற்றை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் கடல்பரப்பு மற்றும் கடற்கரை பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, மாநில கடலோரக் காவல் படை மற்றும் சுங்கம் மற்றும் துறைமுக பொறுப்பு கழக ரோந்து படை உள்ளிட்ட முகமைகள் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதர உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கீழ்காணும் தகவல்களை அளித்தார். பாதுகாப்பு உபகரணங்களுக்காக இறக்குமதிகளை சார்ந்திருப்பதை வரும் வருடங்களில் குறைக்கும் விதத்தில், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை 2020 உருவாக்கப்பட்டு, 209 பொருட்களின் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆயுத தொழிற்சாலை வாரியம், 9 பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள், 6 இதர பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 37 தனியார் நிறுவனங்களின் வருடாந்திர விற்றுமுதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17-ல் ரூ 74054 கோடியாக இது இருந்த நிலையில், 2020-21-ல் ரூ 84694 கோடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு சைபர் முகமையை நிறுவ அரசு ஒப்புதல் அளித்தது. இந்த முகமை தற்போது முழுக்க செயல்படும் நிலையில் உள்ளது. சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், முப்படைகளும் தங்களது சைபர் அவசரகால எதிர்வினை குழுக்களை அமைத்துள்ளன. மேலும், தேசிய சைபர் பாதுகாப்பு யுக்தியை இந்திய அரசு வகுத்து வருகிறது. நம்முடைய பல்வேறு துறைகளுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை கண்டறிந்து முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) செயல்படுத்தி வருகிறது. 2018 ஜூலை 1 முதல் 2021 ஜூன் 30 வரை மொத்தம் 239 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணை அமைப்புகள், வான் வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, போர் விமானங்கள், கவச வாகனங்கள், பால மற்றும் சுரங்க அமைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய போர் நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கட்டுமான செலவு ரூ 176.65 கோடி ஆகும். தேசிய போர் நினைவுச் சின்னத்தில் டிஜிட்டல் ஈர்ப்புத்தன்மை மிக்க திட்டத்தை நிறுவும் பணி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது....
Read moreநாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்: பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50,09,014 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34,00,006 வீடுகளுக்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு 2.95 கோடி வீடுகளை வழங்கி அனைவருக்கும் சொந்த வீடு எனும் இலக்கை எட்டுவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிறந்து விளங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ரூ 39,293 கோடி மொத்த மதிப்பீட்டிலான ஏழைகள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 50.78 கோடி மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்குத் திரும்பும் இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 2020 ஜூன் 21 ஏழைகள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் இந்திய அரசின் 12 அமைச்சகங்கள் / துறைகள் ஈடுபட்டன. இதில் பணிக்கு ஏற்றவாறு ஊதியங்கள் வழங்கப்பட்டன. 202122,-ம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு ரூபாய் 73 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11,500 கோடி அதிகமாகும். 6.51 கோடி நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, 130.9 கோடிக்கும் அதிகமான மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய 2021-22-ம் ஆண்டில் 25 லட்சத்துக்கும் அதிகமானச் சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. 2021 ஜூலை 23 வரை, 2021-22-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 54.99 லட்சம் நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பணியாளர் பதிவேடு நிறைவு செய்யப்பட்ட 15 நாட்களில் சுமார் 99.5 சதவீதம் நிதி பரிவர்த்தனை உத்தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பணியாளர்களுக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதற்காக Ne-FMS-ஐ அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண முறையை 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் இதுவரை செயல்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 2018-19-ம் ஆண்டு ரூ 4951.66 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 5447.80 கோடியும்,...
Read moreஅஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் விற்பனைக்கான நேரடி முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. 30.7.2021 அன்று காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா சாலை, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தேவையான தகுதிகள்: a. கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் b. வயது: 18 முதல் 50 வரை c. பிரிவுகள்: வேலையில்லாத/ சுயதொழிலில் ஈடுபடும் படித்த இளைஞர்கள்/ முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள்/ முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள். d. விருப்பத் தகுதி: காப்பீடு திட்டங்களின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள்/ உள்ளூர் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள், சென்னை நகரத்தில் வசிப்பவர்கள். e. இதர காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாகப் பணிபுரிபவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களைப் பற்றிய முழு விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது/ கல்வித்தகுதி/ தேவையான சான்றிதழுடன் நேர்காணலிற்கு வரவேண்டும். சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் துறைத் தலைவர் திரு எம். முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreபெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...
Read moreWelcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Read moreLorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.