Latest Post

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

கோவிட்-19 அண்மைத் தகவல்கள்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 39.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், இதுவரை 3,01,43,850 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.28% ஆக அதிகரித்துள்ளது....

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 39 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை ஏழு மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 49,41,567 முகாம்களின் மூலம் மொத்தம் 39,13,40,491தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், 3,01,43,850பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,130தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.  தேசிய குணமடையும் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 18-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 4,32,041ஆக உள்ளது. இது மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 1.39 விழுக்காடு மட்டுமே. கடந்த 24 மணி நேரத்தில் 19,43,488 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.80 கோடியைக் கடந்து, 43,80,11,958ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.21% ஆகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.15% ஆகவும் தற்போது உள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக தொற்று உறுதி விகிதம் 3 விழுக்காட்டுக்கு குறைவாகவும், 38-வது நாளாக 5 விழுக்காட்டுக்கு குறைவாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சி!பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்!

அரசு பள்ளி,மருத்துவமனை கட்டடங்கள் விரைவாகவும்‌, தரமாகவும்‌ அமைத்திட வேண்டும்‌! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

அரசுப்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரிக்‌ கட்டடங்கள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ அரசு துறைக்‌ கட்டடங்களை விரைவாகவும்‌, தரமாகவும்‌ அமைத்திட வேண்டும்‌” பொதுப்பணித்‌ துறை ஆய்வுக்‌ கூட்டத்தில்‌மாண்புமிகு முதலமைச்சர்‌...

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சி!பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்!

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சி!பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்!

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுபெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயணம்.பாஜகவை திட்டுவதை மட்டும் பார்க்கும் இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் விற்பனைக்கான நேரடி முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. 30.7.2021 அன்று காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா சாலை, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில்  கீழ்க்காணும் தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தேவையான தகுதிகள்: a.       கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் b.       வயது: 18 முதல் 50 வரை c.       பிரிவுகள்:  வேலையில்லாத/ சுயதொழிலில் ஈடுபடும் படித்த இளைஞர்கள்/ முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள்/ முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள். d.       விருப்பத் தகுதி: காப்பீடு திட்டங்களின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள்/ உள்ளூர் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள், சென்னை நகரத்தில் வசிப்பவர்கள். e.       இதர காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாகப் பணிபுரிபவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களைப் பற்றிய முழு விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது/ கல்வித்தகுதி/ தேவையான சான்றிதழுடன் நேர்காணலிற்கு வரவேண்டும். சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் துறைத் தலைவர் திரு எம். முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்கா.

நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்கா.

நாட்டின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் என்டிபிசி அமைக்கவுள்ளது. தேசிய அனல் மின் நிறுவனத்தின்(என்டிபிசி) 100 சதவீத துணை நிறுவனம், என்டிபிசி...

தடுப்பூசிக்கு எதிரான பொய்யான தகவல்களை எதிர்கொள்ள பிரபலங்கள், ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுங்கள்: பிரதமர் மோடி.

தடுப்பூசிக்கு எதிரான பொய்யான தகவல்களை எதிர்கொள்ள பிரபலங்கள், ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுங்கள்: பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொவிட்-19 நிலவரம் குறித்து இன்று கலந்துரையாடினார். நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். கொவிட் பெருந்தொற்றை உரிய நேரத்தில் கையாண்டதற்காக பிரதமருக்கு முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் வழங்கியதற்காக பிரதமரை அவர்கள் பாராட்டினர். உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரம், வட கிழக்கு மாகாண வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களும் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர். தங்களது மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்தும், தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசிகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர்கள் விளக்கமளித்தனர். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயங்குவது தொடர்பான பிரச்சனை மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். கொவிட் தொற்றை சமாளிப்பதற்காக மருத்துவ உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணத்தால் (பிஎம் கேர்ஸ்) அளிக்கப்பட்ட ஆதரவு பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். தங்களது மாநிலங்களில்  தொற்று உறுதி விகிதம் மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். ஒட்டுமொத்த அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி உள்துறை அமைச்சர் பேசினார். எனினும், இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் ஒரு சில பகுதிகளில்  தொற்று உறுதி விழுக்காடு அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பரிசோதனை, தடம் அறிதல், கண்காணித்தல் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.  கொவிட் பாதிப்புகள் குறித்த ஒட்டுமொத்த பார்வையை சுகாதாரத்துறை செயலாளர் முன் வைத்ததோடு, ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் தொற்று உறுதி வீதம் உயர்ந்திருப்பது பற்றியும் ஆலோசித்தார். மருத்துவப் பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்த அவர், தடுப்பூசியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். கூட்டத்தில் பேசிய பிரதமர், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மாநிலங்களின் கடினமான நிலப்பரப்பையும் பொருட்படுத்தாது பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகத் தீவிரமாக உழைத்த வடகிழக்கு மாநிலங்களின் மக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசுகளைப் பாராட்டினார். ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், இந்த சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மிகச்சிறிய அளவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையை சமாளிப்பதற்காக மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான நெறிமுறைகளைப் பயன்படுத்துமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். விரைவாக உருமாறும் தன்மையுடைய தொற்று குறித்துப் பேசிய பிரதமர், தொற்றின் உருமாறும் தன்மையையும் அனைத்து மாறுபாடுகளையும்  தீவிரமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். மாறுபாடுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். கொவிட் சரியான நடத்தை விதிமுறையை வலியுறுத்திய அவர், இதுபோன்ற சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கூறினார். தனிநபர் இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்றவற்றின் பயன்பாடு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அதேபோல பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய உத்திகளும் நிரூபணமாகியுள்ளன. சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் பெருந்தொற்றின் தாக்கம் குறித்துப் பேசிய பிரதமர், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு எதிராக கடுமையாக எச்சரித்தார். மூன்றாவது அலை துவங்குவதற்கு முன்பு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள் என்ற கூற்றை நிராகரித்த அவர், மூன்றாவது அலை தானாகவே உருவாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மூன்றாவது அலையை எவ்வாறு தடுப்பது என்பதுதான் நமது மனதில் எழும் முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அஜாக்கிரதை மற்றும் கூட்ட நெரிசலால் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இதுபற்றி நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தவிர்க்கக்கூடிய நெரிசலைத் தடுக்க வேண்டும் என்று அவர் தீவிரமாக வலியுறுத்தினார். ‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து' என்ற மத்திய அரசின் பிரச்சாரத்தில் வடகிழக்குப் பகுதியும் சம அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதாகவும், எனவே தடுப்பூசித் திட்டத்தைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். தடுப்பூசி பற்றியும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது பற்றியும் எழுப்பப்படும் தவறான செய்திகளை எதிர்கொள்வதற்காக, சமூக, கல்வி நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் தடுப்பூசித் திட்டத்தை அதிகப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 23,000 கோடி தொகுப்பிற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், வடகிழக்குப் பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தத் தொகுப்பு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். பரிசோதனை, சிகிச்சை, மரபியல் மாறுபாடுகளை இந்தத் தொகுப்பு விரைவுபடுத்தும். வடகிழக்குப் பகுதிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, பிராணவாயு வசதி மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவின் உள்கட்டமைப்பை துரிதமாக அதிகரிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான பிராணவாயு ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், வட கிழக்குப் பகுதிகளிலும் 150 ஆலைகள் நிறுவப்படவிருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்த ஆலைகளின் பணியை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்தார். வடகிழக்குப் பகுதிகளின் புவி சார்ந்த நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக மருத்துவமனைகள் அங்கு அமைக்கப்படுவதன் தேவையை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். பிராணவாயு ஆலைகள், அவசர கட்டுப்பாட்டுப் பிரிவுகள், புதிய இயந்திரங்கள் போன்றவை இரண்டு வட்டார அளவிலான மருத்துவமனைகளுக்கு விரைவில் வழங்கப்படவிருப்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார். பரிசோதனையின் திறன் நாளொன்றுக்கு 20 லட்சம் பரிசோதனைகளாக இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரிசோதனை வசதிக்கான உள்கட்டமைப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். நோக்கின்றி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுடன், தீவிர பரிசோதனைகளையும் அவர் வலியுறுத்தினார். ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் வாயிலாக தொற்றின் பரவலை நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

இந்திய அரசமைப்பால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கான போட்டி தேர்வை நடத்துவது குறித்து வங்கியியல் ஆட்சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள...

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

நாட்டில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள்,  48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன.  கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 41,506 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது....

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும்  பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி  3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

Page 35 of 38 1 34 35 36 38

Follow Us

Business

No Content Available

Entertainment

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.