Tag: CENTRAL GOVERNMENT

நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரிப்பு.

நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரிப்பு.

நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என   மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி  கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த  பதிலில் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு,  எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.   எல்பிஜி மானியம், தானியங்கி முறையில்  வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.  இதற்கு  2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும். இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: நாட்டில்  இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி: தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: ரயில்வே அமைச்சர்.

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: ரயில்வே அமைச்சர்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.  புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இதில் அடங்கும். 814 நிலையங்களில் இது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியை துரிதப்படுத்துவதற்காக சில மண்டல ரயில்வேக்கள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கிடையே பணிகள் பகிரப்பட்டுள்ளன. 2020 ஜூன் 20 அன்று அறிவிக்கப்பட்ட ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம், 2020 அக்டோபர் 22 வரை 125 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டது. ரயில்பாதைகளை இரட்டை தடமாக்குதல், மின்மயமாக்குதல், புதிய தடங்களின் கட்டுமானம், பாலங்களின் கட்டுமானம், சிக்னல் பணிகள் உள்ளிட்ட 143 உள்கட்டமைப்பு திட்டங்களை ஆறு மாநிலங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் துரிதப்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்தது. பிகாரில் 36 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஜார்கண்டில் 28 உள்கட்டமைப்பு திட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 6 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஒடிசாவில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களும், ராஜஸ்தானில் 53 உள்கட்டமைப்பு திட்டங்களும், உத்தரப் பிரதேசத்தில் 143 உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, 14,14,604 மனித பணி நாட்கள் உருவாக்கப்பட்டன.  ரயில்வே வசதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு தானியங்கி முறையில் கீழ் படுக்கையை ஒதுக்கீடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி, ஐஆர்சிடிசியின் ஆன்லைன் தளமான irctc.co.in மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்டவை சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்.

கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் பதிலளித்தார். கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் குறித்த திருமதி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடலோர மற்றும் கடல்புற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக கூறினார். அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை என்ற நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கையை பின்பற்றி வரும் அரசு, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய, மக்கள் சார்ந்த பிராந்திய கட்டமைப்புகளை நிலைத்தன்மை மற்றும் வளத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கி வருவதாக அமைச்சர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் சார்ந்த விஷயங்களை அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாகவும், அவற்றை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் கடல்பரப்பு மற்றும் கடற்கரை பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, மாநில கடலோரக் காவல் படை மற்றும் சுங்கம் மற்றும் துறைமுக பொறுப்பு கழக ரோந்து படை உள்ளிட்ட முகமைகள் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதர உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கீழ்காணும் தகவல்களை அளித்தார். பாதுகாப்பு உபகரணங்களுக்காக இறக்குமதிகளை சார்ந்திருப்பதை வரும் வருடங்களில் குறைக்கும் விதத்தில், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை 2020 உருவாக்கப்பட்டு, 209 பொருட்களின் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஆயுத தொழிற்சாலை வாரியம், 9 பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள், 6 இதர பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 37 தனியார் நிறுவனங்களின் வருடாந்திர விற்றுமுதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17-ல் ரூ 74054 கோடியாக இது இருந்த நிலையில், 2020-21-ல் ரூ 84694 கோடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு சைபர் முகமையை நிறுவ அரசு ஒப்புதல் அளித்தது. இந்த முகமை தற்போது முழுக்க செயல்படும் நிலையில் உள்ளது. சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், முப்படைகளும் தங்களது சைபர் அவசரகால எதிர்வினை குழுக்களை அமைத்துள்ளன. மேலும், தேசிய சைபர் பாதுகாப்பு யுக்தியை இந்திய அரசு வகுத்து வருகிறது. நம்முடைய பல்வேறு துறைகளுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை கண்டறிந்து முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) செயல்படுத்தி வருகிறது. 2018 ஜூலை 1 முதல் 2021 ஜூன் 30 வரை மொத்தம் 239 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணை அமைப்புகள், வான் வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, போர் விமானங்கள், கவச வாகனங்கள், பால மற்றும் சுரங்க அமைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய போர் நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கட்டுமான செலவு ரூ 176.65 கோடி ஆகும். தேசிய போர் நினைவுச் சின்னத்தில் டிஜிட்டல் ஈர்ப்புத்தன்மை மிக்க திட்டத்தை நிறுவும் பணி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் விற்பனைக்கான நேரடி முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. 30.7.2021 அன்று காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா சாலை, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில்  கீழ்க்காணும் தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தேவையான தகுதிகள்: a.       கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் b.       வயது: 18 முதல் 50 வரை c.       பிரிவுகள்:  வேலையில்லாத/ சுயதொழிலில் ஈடுபடும் படித்த இளைஞர்கள்/ முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள்/ முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள். d.       விருப்பத் தகுதி: காப்பீடு திட்டங்களின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள்/ உள்ளூர் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள், சென்னை நகரத்தில் வசிப்பவர்கள். e.       இதர காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாகப் பணிபுரிபவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களைப் பற்றிய முழு விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது/ கல்வித்தகுதி/ தேவையான சான்றிதழுடன் நேர்காணலிற்கு வரவேண்டும். சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் துறைத் தலைவர் திரு எம். முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.