Tag: FakeNews

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

நீட் மற்றும் இதர நுழைவு தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் தகவல்.

நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. நீட் (முதுநிலை மற்றும் நீட் (இளநிலை) 2021 தேர்வுகள் 2021 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த தேர்வுகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொவிட் நெறிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்படும். மேலும், தேர்வை பாதுகாப்பாக நடத்த தேர்வு எழுதுவோர் மற்றும் நடத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.  கூட்டம் மற்றும் நீண்ட பயணத்தை தவிர்க்க நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொவிட் இ-பாஸ்-உடன், நுழைவுச் சீட்டு வழங்கப்படுகின்றன.  தேர்வு மையங்களுக்குள் விண்ணப்பதாரர்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும்.  நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு, இதற்காக அமைக்கப்படும் தனிமை மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, முக தடுப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். தேர்வு மையத்துக்கு வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் / மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களுக்கு உதவி: கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றன. கொவிட்-19 அவசரகால மீட்பு மற்றும் சுகாதார தயார்நிலை நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.15,000 கோடிக்கு  மத்திய அமைச்சரவை  2020ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஒப்புதல் அளித்தது.  இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார திட்டம் மூலமாக ரூ.8257.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு தொகை ரூ.110.60 கோடியும் அடங்கியுள்ளது. மாநிலம் வாரியான விவரங்கள் இணைப்பு 1-ல் உள்ளது.  மேலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி போட,  செயல்பாட்டு தொகையும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பு 2-ல் உள்ளது. அரிய வகை நோய்கள் கொள்கை: அரியவகை நோய்களுக்கான தேசிய கொள்கை இறுதி செய்யப்பட்டு பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொள்கையை இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.  https://main.mohfw.gov.in/documents/policy.         ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தடுப்பு யுக்தி அடிப்படையில் அரியவகை நோய்களை குறைப்பதை இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. ...

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2வது சோதனை.

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2வது சோதனை.

மூன்று நாளில் இரண்டாவது முறையாக புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.  புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், டிஆர்டிஓ இன்று காலை 11.45 மணிக்கு வெற்றிகரமாக  பரிசோதனை செய்தது. வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள்,   கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது.  இந்த பரிசோதனையை விமானப்படை அதிகாரிகள் குழுவும் பார்வையிட்டது. இந்த ஏவுகணை வானில் அதிவேகத்தில் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் உடையது. இந்திய விமானப்படைக்கு இது நிச்சயம் வலு சேர்க்கும். கடந்த ஜூலை 21ம் தேதியும், ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மூன்று நாள் இடைவெளியில், 2வது முறையாக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதற்கு, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, மற்றும் ஏவுகணை தயாரிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த நவீன ஏவுகணை உருவாக்கியுள்ளது, இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும்.  அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

கோவிட்-19 அண்மைத் தகவல்கள்

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 42.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், இதுவரை 3,04,68,079 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,740 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 35,342 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.30% ஆகும். வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.14% ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 32 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.12%, ஆகப் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.29 கோடி ஆகும்.

ஆட்சியரிடம் ரூ. 9 கடன் கேட்டு மனு அளித்த இளைஞர் ! விழுப்புரத்தில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம்.

#SNIPER FLASH# விழுப்புரம் ஆட்சியரிடம் ரூ. 9 கடன் கேட்டு இளைஞர் ஒருவர் மனு அளித்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் மோகன். இவர் இன்று ...

பேரறிவளனுக்கு பரோல் நீட்டிப்பு வேண்டும் முதல்வருக்கு விழுப்புரம் எம்.பி வேண்டுகோள்.

16.07.2021 தேதியிட்ட உச்சநீதிமன்ற ஆணையின்படி பேரறிவாளனுக்குப் ‘பரோல்’ நீட்டிப்பு வழங்க வேண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “ கொரோனா ...

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 39 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை ஏழு மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 49,41,567 முகாம்களின் மூலம் மொத்தம் 39,13,40,491தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், 3,01,43,850பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,130தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.  தேசிய குணமடையும் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 18-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 4,32,041ஆக உள்ளது. இது மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 1.39 விழுக்காடு மட்டுமே. கடந்த 24 மணி நேரத்தில் 19,43,488 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.80 கோடியைக் கடந்து, 43,80,11,958ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.21% ஆகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.15% ஆகவும் தற்போது உள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக தொற்று உறுதி விகிதம் 3 விழுக்காட்டுக்கு குறைவாகவும், 38-வது நாளாக 5 விழுக்காட்டுக்கு குறைவாகவும் உள்ளது.

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

வங்கிகளுக்கான போட்டி தேர்வை உள்ளூர் மொழிகளில் நடத்துவது தொடர்பான நிதி அமைச்சகத்தின் விளக்கம்.

இந்திய அரசமைப்பால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கான போட்டி தேர்வை நடத்துவது குறித்து வங்கியியல் ஆட்சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ...

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

நாட்டில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள்,  48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன.  கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 41,506 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. ...

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு.

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும்  பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி  3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ...

ரூ. 91 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 23 நிறுவனங்கள்: 3 பேர் கைது.

ரூ. 91 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 23 நிறுவனங்கள்: 3 பேர் கைது.

உளவுப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மேற்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரிவின் அதிகாரிகள் ...

Page 23 of 25 1 22 23 24 25

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.