பெங்களூருவிலிருந்து பதவி உயர்வு பெற்று மாற்றுதலாகி வந்த சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1987ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாவார். மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் பலவற்றில், இவர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு சென்னையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் நிர்வாகப்பிரிவு கூடுதல் ஆணையர் பி.திவாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.