Tag: ind

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 39 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை ஏழு மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 49,41,567 முகாம்களின் மூலம் மொத்தம் 39,13,40,491தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,97,058தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், 3,01,43,850பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,130தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.  தேசிய குணமடையும் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 18-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 4,32,041ஆக உள்ளது. இது மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் 1.39 விழுக்காடு மட்டுமே. கடந்த 24 மணி நேரத்தில் 19,43,488 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.80 கோடியைக் கடந்து, 43,80,11,958ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.21% ஆகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.15% ஆகவும் தற்போது உள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக தொற்று உறுதி விகிதம் 3 விழுக்காட்டுக்கு குறைவாகவும், 38-வது நாளாக 5 விழுக்காட்டுக்கு குறைவாகவும் உள்ளது.

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.