Tag: INDIANARMY

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு திருக்கோவிலூர் முன்னாள் இராணுவ வீரர்கள் அஞ்சலி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக இன்று முடித்தது. இதற்காக இந்த கப்பல் கொச்சியிலிருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது.  கடல் பரிசோதனைகள் ...

வெல்லிங்டனில் மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் உரை.

வெல்லிங்டனில் மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் உரை.

தமிழகத்தில் உள்ள  வெல்லிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் 77வது பயிற்சியை நிறைவு செய்த,  பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 4, 2021) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது பாதுகாப்பு படைகள், நமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது என்றார்.  அயராத முயற்சிகள் மற்றும் சிறந்த தியாகத்தால், பாதுகாப்பு படையினர் நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.  போர் மற்றும் அமைதிக் காலத்தில், அவர்கள் நாட்டுக்கு மதிப்பற்ற சேவைகளை வழங்கியுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சாவல்களை சந்திக்கும்போதும் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களிலும், அவர்கள் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் செய்துள்ளனர்.  கொவிட்-19 பெருந்தொற்றை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் கூறுகையில், சமீபத்திய காலம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் மிகவும் சிரமமாக இருந்து வருகிறது என்றார்.  இந்த பெருந்தொற்று, அனைத்து தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  எல்லையிலும், கொவிட்-19 பெருந்தொற்றை சமாளிப்பதிலும், நமது பாதுகாப்புடையினரின்  மிகச் சிறந்த உறுதியை அவர் பாராட்டினார்.  கொவிட் சவால்களை எதிர்கொண்டதில், பாதுகாப்பு படையினரில் பெரும்பாலானோர், முன்கள பணியாளர்களாக இருந்தனர். அவர்களின் உறுதி மற்றும் பங்களிப்பை நாடு போற்றுகிறது.  மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் கூறினார்.  தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகள் பற்றி கருத்துக்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.  புவி-யுக்தி மற்றும் புவி- அரசியல் கட்டாயங்கள் மற்றும் பல காரணிகள் பாதுகாப்பு நிலவரத்தை அதிக சிக்கலாக்கியுள்ளது.  அதனால், பயிற்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுக்கு, மாறும் சூழலை புரிந்துகொள்ள உதவும் வகையில் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.  அப்போதுதான் அவர்களால், நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் பாதுகாப்பு விஷயங்களின் அவர்களின் பங்கை பயிற்சி அதிகாரிகளால் அடையாளம் காண முடியும் என அவர் கூறினார். 21ம் நூற்றாண்டு சமூகம் அறிவார்ந்த சமூகமாக உள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். இந்த நூற்றாண்டில் அறிவு உண்மையிலேயே சக்தி வாய்ந்ததாக உள்ளது. அறிவு பொருளாதார யுகத்தில் நாம் இருக்கிறோம் என கூறப்படுவதுபோல்,  நாம் அறிவு போர் யுகத்திலும் இருக்கிறோம்.  பாதுகாப்பு பணியாளராக, ராணுவ அதிகாரிகள், அறிவார்ந்த வீரர்களாக இருக்க வேண்டும்.  ராணுவ பயிற்சி கல்லூரியில், அதிகாரிகள் கற்றது, தேவையான திறன்களை ஊக்குவிக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த பயிற்சி, எதிர்காலத்தில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளை தயார்படுத்தும்.  சிறந்த தொழில்நுட்பங்கள், நவீன யுக்திகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கற்பது, பயிற்சி அதிகாரிகளை சிறந்த வல்லுனர்களாக்கும் என குடியரசுத் தலைவர் கூறினார்.

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2வது சோதனை.

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: 3 நாளில் 2வது சோதனை.

மூன்று நாளில் இரண்டாவது முறையாக புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.  புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், டிஆர்டிஓ இன்று காலை 11.45 மணிக்கு வெற்றிகரமாக  பரிசோதனை செய்தது. வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள்,   கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது.  இந்த பரிசோதனையை விமானப்படை அதிகாரிகள் குழுவும் பார்வையிட்டது. இந்த ஏவுகணை வானில் அதிவேகத்தில் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் உடையது. இந்திய விமானப்படைக்கு இது நிச்சயம் வலு சேர்க்கும். கடந்த ஜூலை 21ம் தேதியும், ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மூன்று நாள் இடைவெளியில், 2வது முறையாக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதற்கு, டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, மற்றும் ஏவுகணை தயாரிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த நவீன ஏவுகணை உருவாக்கியுள்ளது, இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும்.  அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.