Tag: NEWS

கடந்த 3 ஆண்டுகளில், மொத்தம் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு: மக்களவையில் தகவல்.

கடந்த 3 ஆண்டுகளில், மொத்தம் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு: மக்களவையில் தகவல்.

கடந்த 3 ஆண்டுகளில், மொத்தம்  5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார். அவர் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக  தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நாட்டில் மின்சார வாகனங்களுக்கு விரைவில் மாறவும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India (FAME India) ஃபேம் இந்தியா திட்டம் 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.  தற்போது இரண்டாவது ஃபேம் இந்தியா திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த பட்ஜெட் உதவி ரூ.10,000 கோடி. இந்த இரண்டாவது கட்டத்தில் 7090 மின்சார பஸ்கள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 மின்சார கார்கள், 10 லட்சம் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மின்சார வாகனங்களை தயாரிக்க 38 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் விவரம் இணைப்பு -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. * ஃபேம் -2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ...

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி ...

2022-ம் ஆண்டுபத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்

2022-ம் ஆண்டுபத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் – 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம்

2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது.  பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி.  பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in  ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில்  சாதனை புரிந்த/ சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in)  ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன.  இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx விவரங்கள் மற்றும் உதவிக்கு, இந்த போன் எண்களை தொடர்பு கொள்ளவும்:  011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786

COVID-19 பற்றிய அண்மைத் தகவல்

கோவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 50.68 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,10,99,771 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39%. கடந்த 24 மணி நேரத்தில் 43,910 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேர் புதிதாகப் ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக இன்று முடித்தது. இதற்காக இந்த கப்பல் கொச்சியிலிருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது.  கடல் பரிசோதனைகள் ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு புதிய நேரடி முகவர்கள் – நேர்காணல்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ...

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே ...

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம்- முதல்வர் வாழ்த்து.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம்- முதல்வர் வாழ்த்து.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம்.41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஹாக்கியில் 12-ஆவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு எனது பாராட்டுகள். ...

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது ...

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த், தனது முதல் பரிசோதனையில் வெற்றி.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த், தனது முதல் பரிசோதனையில் வெற்றி.

இந்திய கடற்படைக்காக கொச்சின் கப்பல் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் சவாலான போர் கப்பலான விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் தனது முதல் கடல் பரிசோதனைக்கு புறப்பட்டது குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பாராட்டு தெரிவித்தார்.  விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே கட்டமைப்பது மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முன்னெடுப்புகளின் உண்மையான பிரதிபலிப்பாக இது விளங்குவதாக கூறினார். நாட்டை பெருமைப்படுத்தியதற்காக இந்திய கடற்படை மற்றும் கொச்சின் கப்பல் தளத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலான இந்த விமானம் தாங்கி கப்பல் 40,000 டன் எடை கொண்டதாகும். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 21,500 டன்கள் சிறப்பு ரக எஃகு, இந்திய போர் கப்பல்களிலேயே  முதல்முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோமீட்டர்கள் நீள கேபிள்கள், 120 கிலோமீட்டர்கள் நீள பைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலமும், 2300 அறைகள் இதில் இருப்பதன் மூலமும் இதன் பிரமாண்டத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு சிறிய மிதக்கும் நகரமாக காட்சியளிக்கும் இக்கப்பலில், இரு கால்பந்து மைதானங்களின் அளவுக்கு விமானங்களை நிறுத்தும் இடம் இருக்கிறது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்துடன் இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Page 22 of 27 1 21 22 23 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.