அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்.
அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் விற்பனைக்கான நேரடி முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. 30.7.2021 அன்று காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா சாலை, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தேவையான தகுதிகள்: a. கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் b. வயது: 18 முதல் 50 வரை c. பிரிவுகள்: வேலையில்லாத/ சுயதொழிலில் ஈடுபடும் படித்த இளைஞர்கள்/ முன்னாள் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள்/ முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள். d. விருப்பத் தகுதி: காப்பீடு திட்டங்களின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி சார்ந்த பயிற்சி பெற்றவர்கள்/ உள்ளூர் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள், சென்னை நகரத்தில் வசிப்பவர்கள். e. இதர காப்பீட்டு நிறுவனங்களில் முகவர்களாகப் பணிபுரிபவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களைப் பற்றிய முழு விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது/ கல்வித்தகுதி/ தேவையான சான்றிதழுடன் நேர்காணலிற்கு வரவேண்டும். சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் துறைத் தலைவர் திரு எம். முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.