கோவிட்-19 அண்மைத் தகவல்கள்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 42.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், இதுவரை 3,04,68,079 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,740 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 35,342 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.30% ஆகும். வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.14% ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 32 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.12%, ஆகப் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.29 கோடி ஆகும்.